ரஜினி படத்தையும் மரணமாய் கலாய்த்த தமிழ்படம்-2

151

சமீபத்தில் வெளியான ரஜினியின் காலா படத்தையும் விட்டு வைக்காமல் கலாய்த்துள்ளனர் தமிழ்படம்-2 படக்குழுவினர்.

சி.எஸ் அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழ்படம். இதில் பல படங்களை கிண்டலடித்து எடுத்திருந்தனர். இது ரசிகர்களிடம் நல்ல வரவேப்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை தமிழ்படம்-2 என உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தில் தற்போதைய அரசியல்வாதிகள் நிகழ்வுகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை கிண்டலடித்து எடுத்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரஜினியின் காலா போஸ்டரை கலாய்த்துள்ளனர். இன்று வெளியான போஸ்டரில் காலா படத்தையும்  ஜூராசிக் பார்க் படத்தையும் சேர்த்து ‘தமிழ்ப்படம்-2’ போஸ்டரில் கலாய்த்துள்ளனர். இதே போல விஸ்வரூபம் கமல் கெட்டப்பில் நடிகர் சதீஷ் உள்ள போட்டோவும் வெளியாகியுள்ளது.

SHARE