ரஜினி பிறந்த நாளில் எந்திரன்–2 படபூஜை

371
ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ராதிகாஆப்தே நடிக்கிறார். வருகிற 17–ந் திகதி இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை 60 நாட்களில் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்–2’ படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இதை பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரஜினி ஜோடியாக திபிகா படுகோனே அல்லது கத்ரினா கைப் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். முக்கிய நடிகர், நடிகைகள் தவிர மற்றவர்கள் யார் என்பதை ஷங்கர் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

‘எந்திரன்–2’ படப்பிடிப்பு 2016–ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது இந்த படத்தின் பூஜையை ரஜினியின் பிறந்த நாளான வருகிற டிசம்பர் 12–ந் திகதி நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வருடத்தில் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு டிசம்பர் 12–ந் திகதி ‘எந்திரன்–2’–ஐ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

‘கிராபிக்ஸ்’ காட்சிகளுடன் மெகாபட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் ஷங்கர்–ரஜினியின் அடுத்த கூட்டணியின் ‘எந்திரன்–2’ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE