இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால முன்னாள் வீரர்கள் அர்ஜூன ரணதுங்க மற்றும் அரவிந்த டி சில்வா மீது ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அவர்கள் இருவருமே முதன்முதலில் ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டை எதிர்கொண்ட இலங்கையர்கள் என தெரிவித்துள்ள அவர் குப்தா என்பவரிடமிருந்து இருவரும் 15000 அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வேளை இந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவில்லை என எங்கள் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.