ரணிலின் 17சகாக்கள் மைத்திரியிடம் ஓட்டம்…??

204

ஐக்கிய தேசிய கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரனில் அதிருப்தியாளர்கள் 17 பேர் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அரசியல் உயர்மட்ட செய்திகள் மூலம் மடவளை நியுசுக்கு அறியக்கிடைத்தது.

இந்த ஆட்சி மாற்றத்துக்காக பாடு பட்ட பலர் ஓரங்கட்டப்பட்டு கடந்த காலங்களில் முகவரியே இல்லாமல் இருந்த பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமானவர்களால் கட்சியும் ஆட்சியும் ஆகிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இந்த நிலை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தவிர ஐக்கிய தேசிய கட்சி சிரேஷ்ட அமைச்சர்கள் கட்சியின் இதர உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உழலுக்கு எதிரான விசாரனைகளில் எற்பட்டுள்ள இழுபறி,திசைமாறி பயனிக்கும் நல்லட்சி பயணத்தின் ஏற்பட்டடுள்ள நம்பிக்கையின்மை,மஹிந்த அட்சியில் பெறப்பட்ட சுமை எறபட்டுள்ள நிதி நெருக்கடி , ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அதை நிறைவேற்ற முடியாமல் போனது, எரிபொருள் உற்பட கேள்வி அதிகமாக உள்ள பொருற்களின் அதிகப்படியான விலை குறைப்பினால் எற்பட்டுள்ள வருமான இழப்பு உள்ளிட்ட விடங்களால் அரசு மக்களின் நம்பிக்கையை மட்டுமல்லாமல் ஆளும் தரப்பு அதிருப்தியாளர்களையும் அரசின் மீது நம்பிக்கை இழக்கசெய்துள்ள நிலையில் இந்த கட்சி தாவல்கள் ஐக்கிய தேசிய கட்சி பொரும் நெருக்கடியை கொண்டுவந்து சேர்க்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE