முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சிங்கப்பூரில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு எதிர்வரும் 18ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தென்னாசிய புலம்பெயர்ந்தோர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நிலையில் அதில் இந்த மூவரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த மூவரும் தனியாக விசேடமாக குறித்து பலரும் வியப்பை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.