ரணில் எப்படி பிரதமரானார்? டிலான் பெரேரா விளக்கம்

310

ரணில் விக்ரமசிங்க புண்ணியத்தின் பயனாக பிரதமரானவர் அல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற பெரும்பான்மை அதிகாரமின்றி பாவம் புண்ணிம் பார்த்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார் என டிலான் பெரேரா குற்றம் சுமத்தி வந்தார்.

எனினும் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் நிறைவடைந்த பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த போது தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளதாக டிலான் குறிப்பிட்டார்.

நேற்று சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது,

தெளிவாக கூறவிரும்புகின்றேன், தொடர்ந்து அவரை புண்ணியத்தில் பிரதமரானார் என்று கூறுவது மிகவும் தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மை அதிகாரத்தை கொண்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE