ரயிலில் குழந்தையை தவறி விட்டுச் சென்ற பெற்றோர். பொலிசார் அதிரடி நடவடிக்கை

232

சுவிட்சர்லாந்து நாட்டில் பச்சிளம் குழந்தையை ரயிலில் தவறுதலாக விட்டுச் சென்ற பெற்றோரை பொலிசார் கடுமையாக கண்டித்து குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் இருந்து பையல் நகருக்கு நேற்று InterRegio ரயில் புறப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் பெற்றோர் இருவர் தங்களது பச்சிளம் குழந்தையை ஒரு சக்கர நாற்காலியில் அமர அமைத்து பயணம் செய்துள்ளனர்.

ரயில் பையல் நகரை அடைந்து உடன் ரயிலை விட்டு இறங்கிய பெற்றோ சக்கர நாற்காலியுடன் குழந்தையை ரயிலிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு ரயில் பெட்டிகளை பரிசோதனை செய்ய பொலிசார் சென்றுள்ளனர்.

அப்போது, ஒரு பெட்டியில் சக்கர நாற்காலியில் அமைதியாக படுத்திருந்த பெண் குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக இவ்விவகாரம் குறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

குழந்தை தவறுதலாக விட்டுச் செல்லப்பட்டதா அல்லது வேண்டும் என்று பெற்றோர் குழந்தையை தொலைத்து விட்டு சென்றனரா என பொலிசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பையல் நகரில் இறங்கிய பெற்றோர் தங்களது குழந்தையை தவறுதலாக ரயிலில் விட்டு வந்து விட்டதாக பொலிசாரிடம் தகவல் அளித்துள்ளார்.

பெற்றோரை உடனடியாக வரவழைத்து பொலிசார் அவர்கள் இருவரையும் கடுமையாக கண்டித்து குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில் நிலைய அதிகாரிகள் பேசியபோது, ‘ரயில் பெட்டிகளில் பயணிகள் பல பொருட்களை மறந்து விட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால், தற்போது முதன் முறையாக பெற்றோர் தங்களது குழந்தையை மறந்து விட்டுச் சென்றது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE