ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி

100

 

ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானரா அல்லது ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்தாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE