
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 6ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
ரவிராஜ் கொலை வழக்கு நேற்று கொழும்பு நீதமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபர்ளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
சந்கேத நபர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அரச தரப்பு சாட்சியாளராக மாறிய பிரித்விராஜ் மற்றும் சந்தேக நபர்களான காமினி செனவிரட்ன, பிரசாத் சந்தன குமார மற்றும் பிதீப் சமிந்த ஆகியோரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர போதுமானளவு சாட்சியங்கள் காணப்படுவதனால் வழக்கை உயர் நீதிமன்றில் விசாரணை செய்யுமாறு கடந்த 16ம் திகதி உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.