ரவி கருணாநாயக்க வழக்கு ஒத்திவைப்பு

106

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட இருந்த நிலையில், அவர் நீதிமன்றிற்குச் சமூகமளித்திருக்கவில்லை.

இதனால் குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு பதில் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

பிணைமுறி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொய்ச்சாட்சி கூறியதாக இரகசிய பொலிஸாரினால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE