ரவி சாஸ்திரி ஏன் பயிற்சியாளர் பதவிக்காக போராடினார்? பிசிசிஜ வெளியிட்ட பரபரப்பு தகவல்

241

 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காக ரவி சாஸ்திரி போராடியதற்கான காரணம் குறித்து பிசிசிஐ பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த பின்னர் அணியின் இயக்குனராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். துடுப்பாட்ட பயிற்சியாளராக சஞ்சய் பங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக அருண் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் டி20 உலக கிண்ணத்திற்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

இந்திய அணியின் ‘இயக்குனராக’ கடந்த 18 மாதங்கள் இருந்த ரவி சாஸ்திரி. புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. புதிய திருப்பமாக ‘சுழல்’ ஜாம்பவான் கும்பளே, போட்டியில் குதித்தார். கடைசியில் வாய்ப்பு கும்பளேவுக்கு சென்றது.

இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் தான். அதேநேரம் பி.சி.சி.ஐ.,யின் இச்செயல் ஆச்சரியம் தரவில்லை,’’ என ரவி சாஸ்திரி குற்றம் சாட்டினார்.

அதே நேரம் கங்குலி மீதும் குற்றம் சாட்டினர், இருவருக்கும் இடையில் வாய் வழி மோதலும் தீவிரமானது.

இந்நிலையில், ரவி சாஸ்திரி சம்பளம் குறித்து பிசிசிஜ அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் கடந்த 18 மாதங்கள் இயக்குனராக பணியாற்றி ரவி சாஸ்திரிக்கு சுமார் 4.41 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் பெற்ற பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தான் என குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாகவே ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்காக போராடியதாக பிசிசிஐ மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது.

SHARE