ரஷீத் கான் சொர்க்கத்தில் இருந்து கிடைத்த பரிசு! ஆப்கான் நிர்வாகம் நெகிழ்ச்சி

122

 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆல்ரவுண்டர் வீரர் ரஷீத் கான் தங்களுக்கு சொர்க்கத்தில் இருந்து கிடைத்த பரிசு என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல போராடிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் அணி போட்டியாக இருந்தாலும் ஆப்கானிஸ்தானும் பாரிய ரன்ரேட்டில் கடைசி போட்டியில் வென்றாக வேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணியில் ஆல்ரவுண்டர் வீரர் ரஷீத் கான், நடப்பு தொடரில் 9 விக்கெட்டுகளுடன் 91 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

ரஷீத் கானுக்கு புகழாரம்
இக்கட்டான சூழலில் ஆப்கான் அணிக்கு ரன்களை குவித்து தருவதிலும், மாயாஜால சுழலில் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் ரஷீத் கான் வல்லவர் ஆவார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரஷீத் கானை புகழ்ந்து எக்சில் பதிவிட்டுள்ளது. அதில், ‘சொர்க்கத்தில் இருந்து வந்த பரிசு ரஷீத் கான், ஆப்கானிஸ்தானின் பெருமை, உத்வேகத்தின் கலங்கரை விளக்கம் மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் திறமையின் உருவம் தான் ரஷீத் கான். நீங்கள் கிரிக்கெட் உலகில் ஒரு அசாதாரண சக்தி மற்றும் உங்கள் சாதனைகள் தேசத்தை தொடர்ந்து பெருமைப்படுத்துகின்றன’ என கூறியுள்ளது.

25 வயதாகும் ரஷீத் கான் 102 போட்டிகளில் 181 விக்கெட்டுகளையும், 1,302 ஓட்டங்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE