புறக்கோட்டை ஹோல்கோட் மாவத்தையில் பாலியல் நடவடிக்கைகளுக்காக தனது முகவருடன் காத்திருந்த பெண்ணொருவரை புறக்கோட்டை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். இதன்போது, ரஷ்யாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளதுடன் பாலியல் நடவடிக்கைகளுக்காக புறக்கோட்டை, வத்தளை, நீர்கொழும்பு அண்டிய பகுதிகளுக்கு சென்று வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே நேற்று புதன்கிழமை இரவு ஹோல்கோட் மாவத்தை பகுதியில் தனது முகவருடன் பாலியல் நடவடிக்கைகளுக்காக தயாராகவிருந்த நிலையில் புறக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை இன்று அளுத்கடை 3 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த புறக்கோட்டை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.