ரஸ்யாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை

158

இலங்கையும், ரஸ்யாவும் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவருகிறது.

அண்மையில் ரஸ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரட்ன, இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.

ரஸ்யாவின் சார்பில் அந்த நாட்டின் பாதுகாப்பு உதவி அமைச்சர் கேனல் ஜெனரல் அலெக்சாண்டர் போமின் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கையின் கீழ் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் இராணுவ ஒத்துழைப்புக்கள் வலுப்படுத்தப்படவுள்ளன.

ஏற்கனவே இலங்கையின் இறுதிப்போரின் போதும் இலங்கை, ரஸ்யாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE