ரஹ்மானால் பணத்தை இழந்த ரசிகர்கள்.. கதறி அழுது, மயங்கி விழுந்த அவலம்.

122

 

சமீபகாலமாக இசையமைப்பாளர்களின் கச்சேரிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வாரத்தின் கடைசி சனி மற்றும் ஞாயற்று கிழமைகளில் ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் கச்சேரிகள் நடத்தி வருகிறார்கள்.

கடந்த 9ஆம் தேதி கூட விஜய் ஆண்டனி முதல் முறையாக தன்னுடைய கச்சேரியை அரங்கேற்றினார். அவரை தொடர்ந்து நேற்று ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி நடந்துள்ளது. ஆனால், இந்த கச்சேரியில் பெரும் அதிர்ச்சிக்குரிய விஷயங்களும் நடந்து என்பது தான் நமக்கு ஷாக் கொடுத்துள்ளது.

பணத்தை இழந்த ரசிகர்கள்
இந்த கச்சேரிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்ஸ் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், விற்கப்பட்டது கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் டிக்கெட்ஸ். இதனால் நேற்று மாலை கச்சேரி நடந்து இடத்தில் பெரும் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

தரவரிசைப்படுத்தப்பட்டடு கோல்ட் டிக்கெட் ரூ. 2000, பிளாட்டினம் மற்றும் டைமண்டு போன்ற டிக்கெட்களின் விலை ரூ. 5000 அதற்கும் மேல் வைத்து விருப்பனை ஆகியுள்ளது.

ஆனால், யார் யார் எந்தெந்த டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்காமல் 35 ஆயிரம் பேர்களை உள்ளே அனுமதித்துள்ளனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ரூ. 2000 மற்றும் ரூ. 5000 கொடுத்த டிக்கெட் வாங்கிய அனைவரும் கடும் கோபமடைந்துள்ளனர்.

மயங்கி விழுந்த அவலம்

இதனால், அங்கு ஏற்பட்ட சில சலசலபில் ரசிகர்கள் சிலர் கதறி அழுது பயங்கியும் விழுந்துள்ளனர். இப்படியொரு பித்தலாட்டமா என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இதன்மூலம் ரசிகர்கள் தங்களது பணத்தையும் இழந்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியில் கொண்டாட்டத்துடன் இருக்கலாம் வந்தோம் இப்படி ஏமாற்றி விட்டீர்களே என ரசிகர்கள் கோபத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

SHARE