ராக்ஸ்டார் ரமணியம்மாவிற்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா- இனிமே வேற லெவல்

174

ராக்ஸ்டார் ரமணியம்மாவை பற்றி தெரியாதவர்கள் தமிழகத்தில் யாருமில்லை. அந்த வகையில் ரமணியம்மாவிற்கு என பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவர் பாடல்கள் தான் தற்போது பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது, இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் அறிமுகமாகிவிட்டார்.

ஆம், ரமணியம்மா தெனாவட்டு, காதல் ஆகிய படங்களில் பாடியுள்ளாராம், அதுமட்டுமின்றி விஜய் ஆண்டனி படத்திலும் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளாராம்.

இந்த தகவலை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்ன பிறகு தான் தெரிந்தது, இது மட்டுமின்றி விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தில் செம்ம பாடல் ஒன்றை பாடியுள்ளாராம்.

அந்த பாட்டு வந்த பிறகு ரமணியம்மா வேற லெவலுக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை என்று கூறப்படுகின்றது.

SHARE