ராஜதந்திர மேதை “சாணக்கியன்” ஐயா சம்பந்தனுக்கு ஒரு பகிரங்க மடல்…

305

அரசியலில் சாணக்கியம் என்ற வார்த்தை கூறுகின்ற அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியன்,அரசியல் மேதை மிக்கியாவில்லியன், மாமேதை மார்க்ஸ் எல்லாரையுமே விஞ்சி விட்ட அரசியல்மேதையே, சிங்களத்தின் குகையில் நின்று அஞ்சாது கர்ஜித்த கிழச் சிங்கமே … இராஜதந்திரத்தால்கடந்த முப்பது ஆண்டுகள் தமிழனை தூக்கி நிறுத்திய தானை தலைவனே … ஐயா…சம்பந்தசிகரமே…வணக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிங்கள் நாடாளுமன்றத்தில் உங்கள்கர்ஜனை கேட்ட போது ஏற்பட்ட புல்லரிப்பு தாங்க முடியாமல்தான் இதனைஎழுதுகின்றேன்…ஐயா…நீங்கள் ஒரு புலி இல்லை சிங்கம் என நிரூபிக்கும் அப்படி ஒரு பேச்சைநான் கேட்டதே இல்லை… எப்படி ஐயா உங்களால் மட்டும் முடிகிறது….. அப்படியே போடு போடுஎன்று போட்டு விட்டீர்கள்… ஈழத் தமிரை காக்க உண்ணாவிரதம் இருந்த தியாகப் புயல்ஆனானப்பட்ட கலைஞர் கருணாநிதி எல்லாம் உங்கள் பேச்சின் முன் தூசு…ஐயா தூசு..

உங்கள் உரை கேட்டு ஆவெண்டு பிளந்த வாய் மூண்டு நாளா மூடவேயில்லை…சிங்களத்தின்குகையாம் நாடாளுமன்றத்தில்….நீங்கள் பேசிய பேச்சில

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி… ஜார்ஜ் புஷ் எல்லாம் உங்கள் பேச்சில தோத்துபோனாங்க …

உங்கள் லாஜிக்..அந்த மாதிரி…ஏன்னா….ஒரு லட்சம் மக்களை கொன்ற மகிந்த அரசின் படைகள்பற்றி வாயே திறக்காமல்…புலிகளை மட்டும் பயங்கரவாதிகள் என்டீங்களே இந்த லாஜிக் யாருக்குவரும்…

பின்ன, புஷ்க்கு மட்டும்தான் புலிகளை பயங்கரவாதின்னு சொல்ல முடியுமா நம்ம ஐயாவுக்குமுடியாதா?… சம்பந்தரா கொக்கா ? உங்களை நினச்சா ரொம்ப பெருமையா இருக்கு.. ஏன்னா ..
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைன்னு கோட்பாடு வச்சு போராடிய புலிகளை…. பயங்கரவாதின்னு சொல்ல உங்களை விட்டா வேற எந்த தமிழனுக்காவது தில் இருக்கா … இந்தராஜ தந்திரம் வேற யாருக்காவது வருமா ?….

ஆனா ஒன்னு… நீங்களே பயங்கரவாதி என்டு புலிகளை சொன்ன பிறகு… அப்ப அவங்களை ஏகபிரதிநிதிகள் எண்டு ஏற்றுக் கொண்டது இவருதான்.. இவரையும் புடிச்சு உள்ள போட்டுறலாமா?அப்படின்னு யாரவது கேட்டுட்டா எண்டு பார்த்தா… புலிய தடை செய்ய வச்ச கதிர்காமரே நம்மபங்காளிதான்னு போட்டிங்களே ஒரு போடு…அங்க நிக்குறீங்க நீங்க ..ஐயா, எத்தனையோஎம்.பி.மார் எல்லாம் சாகடிக்கப்பட்ட போதெல்லாம் நீங்க மட்டும் எல்லாருக்கும் அல்வாகொடுத்திட்டு இண்டைக்கு வரைக்கும் அசையாம இருக்கீங்களே….எப்பிடி? அதுக்குதான் பேர்ராஜதந்திரம்…அத உங்கள மாதிரி வேற யாராலையும் பண்ண முடியுமா?

உங்களுக்கு தெரியாத ராஜதந்திரமா? சிங்களவனை பகைச்சுக்கொண்டு அரசியல் செய்ய நீங்கஎன்ன ரவிராஜ், குமார் பொன்னம்பலம் மாதிரி சாணக்கியம் தெரியாதவரா?.. உங்கட இந்தஸ்பெசாலிட்டி தான் ஐயா உங்களில எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…அப்புறம்.. புலிகள் இல்லாமபோனதுக்கான எல்லா கிரடிட்டையும் மகிந்தவே எடுத்துக்கப் பார்த்தா விட்ருவீங்களாநீங்க…புலிகளை உலகமெல்லாம் தடை செய்ய வச்ச கருவா தோட்ட கம்பி, செந்தமிழ் சொங்கி.. கதிர்காமர் உங்கள் நண்பன், பங்காளி என்று சொந்தம் கொண்டாடி ஷார்ப்பா பங்கு கேட்டிங்கபார்த்தீங்களே அப்ப நீங்கள் எங்கேயோ போய்டீங்க….இத நீங்க என்ன சும்மா பேச்சுக்காசொன்னிங்க…இல்லையே…கதிகாமர் வீட்டு கட்டுத்தறி சுமந்திரன் ஐயாவை நீங்கள் வாரிசாகவளர்க்கும் போதே எங்களுக்குத் தெரியும்…சம்பந்தர் ஒண்டும் சும்மா இல்லை…

..”எதையும் பிளான் பண்ணிதான் பண்ணுவாரு” எண்டு..

இதுக்காகவே உங்களுக்கு லாயர் சுமந்திரன் பன்னாடை(சாரி) பொன்னாடை போர்த்தபோறாராம்…ஆனா சிலைதான் வைக்கணும் என்கிறதுதான் என்னோட ஆசை ஐயா. அது மட்டும்இல்லை ஐயா,.. இனப்படுகொலை, போர் குற்றம், சர்வதேச விசாரணை என்று உலகதமிழரெல்லாம் உயிரை வச்சு வேலை செய்யும் போது அதற்கு எப்படி ஆப்பு அடிக்கலாம் என்றுமகிந்தரும், சோனியா அம்மையாரும், பாண் கி மூனும், வெள்ளை மாளிகையும் தலையை பிச்சிக்கொண்டு இருந்தாங்களாம்….. அந்த நேரம் பார்த்து…அதான் டைமிங்க் பார்த்து…புலிகள் வெறும்பயங்கரவாதிகள் தான் அதுகளை அழிச்சால் பரவாயில்லை… அதுலயும் அதுகள் தற்கொலை தான்செய்து கொண்டதுகள் யாரும் கொல்லயில்லை …சும்மா விசாரணை எல்லாம் ஒண்டும் தேவைஇல்லை என்ற மாதிரி.. நீங்க பார்லிமெண்டுல கொடுத்த் ஐடியா இருக்கே ….

அப்ப தான் நீங்க இந்தியாவுக்கே ஏன் ..அமெரிக்காவுக்கே ராஜதந்திரம் சொல்லுற பெரிய்யஆளுன்னு விளங்கிச்சு…..நீங்க இவ்வளோ பெரிய்ய ராஜ தந்திரம் எல்லாம் பண்றீங்க..உங்களைபோய் கொஞ்ச பேர் தப்பா பேசுறாங்க…படிக்காத மூடன்கள். ஐயா…ராணுவம் எண்டா எதுக்கு …மக்களை பாதுகாக்க தானே…அப்ப எங்கட மக்களில மூண்டு பேருக்கு ஒரு ஆள் கணக்காஇராணுவம் இருந்தா நல்லதுதானே …இத தானே நீங்க பார்லி மேண்டுல ..ராணுவம் எல்லாம்ஒன்றும் வெளியேற தேவை இல்லை நாங்க அப்படி கேக்கவும் இல்லை எண்டீங்கள்.. இதக் கூடபுரியாம உங்களைப் போயி தப்பா பேசலாமா?

அது மட்டும் இல்ல ..

இந்த அறியாத…விடலை பொடியன்கள்… புரியாம கார்த்திகை இருவத்தி ஏழாம் திகதியூனிவர்சிட்டியில தீபம் ஏத்திப் போட்டாங்கள்…அடக்கு முறை தொடர்ந்தா போராடுவோம் என்றுஅதுல சொல்லாம சொல்லிப் போட்டங்கள்… தாங்கள் புலிகளை மாவீரரா தான் மதிக்கிரம்எண்டுற மாதிரியும் ஓபனா காட்டீடாங்கள்…. ஆனா…நீங்க குடுத்த விளக்கம் சும்மா அந்தமாதிரி…? அதாவது..”முள்ளி வாய்க்காளோட எல்லாம் முடிஞ்சு போச்சு …. அவங்க கதிகாமமுருகனுக்குத்தான் தீபம் ஏத்தினாங்க..வேற யாருக்கும் இல்லை….நீங்க ஒன்னும் பயப்புடவேணாம்.. பொடியன்களை நாங்க பார்த்துக்குறோம் .. ஏன் ஏன்டா எங்க கட்சிக்குத்தான் மக்கள்ஒட்டு போட்டு ஆணை கொடுத்து இருக்காங்க… இப்ப எல்லாம் நாங்க தான் ஏக பிரதிநிதி என்டமாதிரி…

இனி எங்க பேச்ச கேக்காம அங்க இனி வீட்டில கூட விளக்கு எத்த மாட்டாங்கன்னு”…. நீங்கஉத்தரவாதம் கொடுக்கிற மாதிரி பேசுனீங்க பாருங்க …உங்க நம்பிக்கை வேற யாருக்கு ஐயாவரும்.. ஐயா, நீங்க பேசுன இங்கிலீசு இவங்கள் ஒருத்தனுக்கும் புரியலை போங்க.. லண்டன்லயும்அமெரிக்காவுலையும் இருவது வருஷமா இருக்கவுங்களுக்கு கூட விளங்களையாம் …
அந்த நேரம் பார்த்து… இங்க உள்ள ஐ.சி.ஜி. எண்ட சர்வதேச நெருக்கடி குழு அப்படின்னுஇயங்குற என்.ஜி.ஒ ஒரு அறிக்கைய விட்டுட்டுது…ஒரு மாதிரி அத வாசிப்பம் என்டு பார்த்தா…நீங்க என்ன பேசணும் எண்டு அவங்க அப்படியே எழுதி வச்சு இருக்காங்க… நீங்களும்அப்பிடியே கிளிப்பிள்ளை மாதிரி ஒரு பிழை இல்லாம அதுல சொன்ன மாதிரியே பேசிஇருந்தீங்க… அப்ப தான் புரிஞ்சது நம்ம சம்பந்தன் ஒண்டும் சாதாரண ஆள் இல்லை… அவருக்குபேச்சு கூட வெளிநாட்டுல இருந்துதான் எழுதுறாங்க… அவரு ரொம்ப பெரிய்ய ஆள் என்று..

சரி, யாருடா இந்த ஐ.சி.ஜி. அப்படின்னு பார்த்தா அவங்கதான் இந்த வெளிநாட்டுஅரசாங்கத்துக்கிட்ட எல்லாம் காசு வாங்கிட்டு அவங்களுக்கு ஏத்த மாதிரி…இலங்கையில எல்லாம்ஒண்ணுக்க இருக்க வேணும்…. இனப்படுகொலை நடந்தது எண்டு எல்லாம் கெட்ட வார்த்தைபேசப்படாது எண்டு சொல்லுரவங்கலாம்… என்ட மாற மண்டைக்கு ஏனோ இவங்க சொல்றதஏத்துக்க முடியல ..ஆனா ” வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்னு உங்களுக்குமட்டும் தான் ஐயா புரிஞ்சிருக்கு… ….என்னதான் இருந்தாலும்…புலிகளையும் மக்களையும் அழிக்கஆயுதம், ஆலோசனை மட்டும் கொடுத்திட்டு சும்மா இருந்திராம ..இன்னைக்கும் கூட மறக்காம..சம்பந்தன் யாவுக்கு ஐடியா சொல்ல வெளிநாடுகள் எல்லாம் இப்படி ஒரு கம்பனியும் வச்சுகொடுதிருக்கிராங்கன்னா…அவங்க ..நல்லவங்களா தானே இருக்கணும்….இப்ப தானே ராஜதந்திரம் எண்டு நீங்க இவ்வளோ காலம் விமானம் விமானமா ஏறி சொல்லிக்கிட்டு இருந்ததுபுரியிது..

மாமேதையே ஐயா, எனக்கு ஒரே ஒரு ஆசை…ஒரு சின்ன விண்ணப்பம் …

நீங்க ஒங்க அருமையான இங்கிலீசு பேச்சை அப்பிடியே ஒருக்கா யாழ்ப்பான பல்கலைகழகத்திலமட்டும் பேசுனீங்க எண்டு வையுங்க….அப்படியே உங்களுக்கு ஆரத்தி எடுத்துருவாங்க…வன்னியில பேசுனா உங்கள எங்கயோ கொண்டு போயிருவாங்க… ஒருக்கா செய்வீங்களா?பிளீஸ் மனசுல ஒன்னும் செயலுள ஒன்னுமா மாறாட்டம் இல்லாத தங்கமே….! நீங்க2009இலகொஞ்சம் மௌனமா இருந்தீங்க அது ஏன் எண்டு எங்கட அறிவில்லா மூளைக்கு அப்போவிளங்கள்ள …எதோ அழிவ நிப்பாட்ட ஐயா எதோ ராஜ தந்திரம் செய்யுறார் எண்டுநினைச்சிட்டம். இப்ப மூண்டு வருஷம் கழிச்சு தானே விளங்குது… பயங்கரவாதிகளை அழிக்கிற”உலக தர்மத்துக்கு” குறுக்கே வரக் கூடாது எண்டுதான் நீங்க மௌனமா இருந்தீங்க எண்டு… போர் எண்டா மக்கள் சாவினம் தானே அதுக்கு ஏன் சாணக்கியம் இல்லாம கூப்பாடு போடாவேணும் எண்டு பேசாமல் இருந்தனீங்கள்…அதுல என்ன ஐயா பிழை…

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… உங்களுக்கு தெரியுமாஐயா….உங்கட உருக்கமானஉரைய கேட்டு மகிந்தா மாமாவும்… சோனியா அண்டியும்,,மண் மோகன் சிங்கு அங்கிளும் கண்கலங்கிட்டாங்கலாம்….. சோனியா அம்மாவின்ற முந்தானை.. கண்ணீர துடைச்சே நனைஞ்சுபோச்சுதாம்…சிங்கு மாமா முண்டாச கலட்டி கண்ணை துடைச்சுக்கிட்டாராம்.. ஆனா சிங்கு மாமாஉங்களை பற்றி ஒன்னு மட்டும் சொன்னாராம் ஐயா அதான் என்னாலயும் அழுகைய அடக்கமுடியல… அதாவது… “என்னதான் இருந்தாலும் சம்பந்தன் ரொம்ப நல்லவன் …ஏன்னா எவ்வளோஅடிச்சாலும் தாங்குறான் எண்டாராம்”…

இதுக்கு மேல முடியல ஐயா மறுபடி முடிஞ்சா எழுதிறன்…

இப்படிக்கு

உங்கள் அடிப்பொடி [PROXY]

-நன்றி -ஒரு பேப்பர்

SHARE