இந்நபர் வேறு ஒருவரும் அல்ல இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியத் பந்து விக்ரமமுனி என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தில் மிகவும் மோசடியான நிறுவனமான இலங்கை துறைமுக அதிகார சபையினுள் இடம்பெற்ற மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் போன்று,
ராஜபக்சவின் விசுவாசமான அமைப்பு ஒன்றுடன் ஊடாக அரசாங்க நிறுவனங்களினுள் மேற்கொள்ளப்படுகின்ற பெரிய அளவிலான மோசடி செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் தயார் என அவரது மனைவியினால் அரசாங்கத்தின் உயர் அதிகாரியிடம் அறிவக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சவின் விசுவாசமான அமைப்பின் தலைவராக பசில் ராஜபக்சவின் பிரதான ஆதரவாளரான பிரியத் பந்து விக்ரமமுனி அதன் செயலாளராக செயற்பட்டுள்ளார்.
இவ் அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணை பிரிவுகள் இதுவரையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவ் விசாரணைகளின் மூலம் வெளியாகும் தகவலுக்கமைய விலிகமகே மற்றும் பிரியத் பந்து விக்ரமமுனி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளமையினால் அதில் இருந்து தப்பிக்கொள்வதற்காக தனது மனைவி ஊடாக இவ்வாறு தகவல் வெளியிட ஆயத்தமாவதாக குறிப்பிடப்படுகின்றது.