ராஜபக்ஸ குடும்பதிற்கு எதிராக விழும் அடுத்த இடி!

229

ராஜபக்ஸ குடும்பத்தின் பலரது பதவிகள் பறிபோகும் சந்தர்ப்பம் உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (15)

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கட்சிக்கு எதிராக செயலாற்றும், கட்சியின் சட்டத்திட்டங்களை மீறும் ராஜபக்ஸ குடும்பத்தின் பல பதவிகள் பறிக்கப்படும்.

நாம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து யாரையும் நீக்க வில்லை. ஆனால் அவர்களின் பதவி மட்டும் பறிபோயுள்ளது எனவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டார்.

மேலும், புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க ஒன்றிணைந்த எதிர் கட்சியின் பலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேசியிருக்கிறனர் எனவும் இது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

இதேவேளை, பசில் ராஜபக்ஸ இதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

SHARE