ராட்சத அலையால் நேர்ந்த விபரீதம்

175

விடுமுறையை கழிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள கடற்கரைக்கு சென்ற குடும்பத்தினரை ராட்சத அலை ஆட்கொண்டுள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் Newquay நகரில் அமைந்துள்ள Fistral கடற்கரைக்கு, விடுமுறையை கழிப்பதற்காக அப்பா அம்மா மற்றும் 3 குழந்தைகள் அடங்கிய குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

இவர்கள் 5 பேரும் கடலில் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி 17.20 மணியளவில் ராட்சத அலை எழுந்துள்ளது, அலையில் தாக்கம் அதிகரித்ததால், அதில் சிக்கிய இவர்கள், அருகில் இருந்த பாறையில் மோதியுள்ளனர்.

இதில், தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், 3 குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கூறியதாவது, 17.00 மணியளவில் அலையின் வேகம் அதிகரித்து, ராட்சத அலையாக எழும்பியுள்ளது, ஆனால் அந்த நேரத்தில் எச்சரிக்கையில்லாமல் இவர்கள் சந்தோஷமாக விளையாடியுள்ளனர்.

இதனால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது, இந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

SHARE