ராணுவத்தில் தவறுசெய்தோரைத் தண்டியுங்கள்! போர்க்குற்ற விசாரணை வேண்டாம்: உதய கம்மன்பில

316
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் தவறு செய்த ராணுவத்தினரைத் தண்டிப்பதற்கு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் அமைக்க வேண்டாம் என்று உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராவய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, இறுதிக் கட்டப் போரில் ராணுவத்தினரில் ஒருசிலர் தவறு செய்திருக்கலாம்.

இதற்கு முன்னரும் ராணுவத்தினர் 1971ல் தென்னிலங்கை கிளர்ச்சியை அடக்கும்போது பிரேமவதி மனம்பேரி என்ற சிங்கள யுவதியை அநியாயமாக கொலை செய்திருந்தனர். 1997ல் வடக்கில் கிருஷாந்தி குமாரசாமி என்ற தமிழ் யுவதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் இவற்றுக்கு இந்நாட்டின் நீதிமன்றங்கள் ஊடாக தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கின் செம்மணிப் புதைகுழிகள் தொடர்பிலும் தவறு செய்த ராணுவத்தினர் நீதிமன்றத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்திலும் ஒரு சில ராணுவத்தினர் தவறுகள் செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பது போதுமானது. அதற்காக சர்வதேசத்தின் உதவியுடன் போர்க்குற்ற நீதிமன்றங்கள் அமைக்க வேண்டியதில்லை. அவ்வாறு அமைப்பது சர்வதேச நாடுகள் எமது உள்விவகாரங்களில் தலையிட வழியேற்படுத்தி விடும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

SHARE