Pan இந்தியா ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் ஜொலித்து வருபவர் பிரபாஸ். இவர் நடித்த பாகுபலி படம் உலகளவில் இவருக்கு நல்ல ரீச்சை ஏற்படுத்தி கொடுத்தது.
ஆனால், அதன்பின் வெளிவந்த சாஹா, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் என மூன்று திரைப்படங்களும் தோல்வியை தழுவியது.
இப்படங்களின் தோல்வி அனைத்தையும் சரி செய்யும் விதமாக சலார் இருக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் அப்படத்தை திரையில் காண காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சிவனாக பிரபாஸ்
ஆதிபுருஷ் திரைப்படம் ராமர் வேடத்தில் நடித்திருந்தார் பிரபாஸ். இந்நிலையில், தற்போது ராமரை வேடத்தை தொடர்ந்து சிவனாகவும் நடிக்கவுள்ளாராம்.
விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் பக்த கண்ணப்பா படத்தில் தான் பிரபாஸ் சிவனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.