ராம்குமார் அணிவகுப்பு சட்டவிரோதமானது! வழக்கறிஞர்

254

சுவாதி படுகொலை வழக்கில், ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது என்று ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி காலை மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (22) என்பவரை ஜூலை 1-ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், ராம்குமாருக்கு நீதிமன்றம் மூலம் விரைந்து தண்டனை பெற்றுத் தருவதற்காக தடயங்களையும், ஆதாரங்களையும் போலீசார் தீவிரமாக திரட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கொலை வழக்குகளில் குற்றவாளியை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் அடையாள அணிவகுப்பை போலீசார் புழல் சிறையில் இன்று நடத்த உள்ளனர்.

இந்நிலையில், ”இந்த அடையாள அணிவகுப்பு குற்றவியல் சட்டத்துக்கு புறம்பானது. ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது. மேலும், பெயர் தெரியாமல் இருந்தால் மட்டுமே அடையாள அணிவகுப்பு நடத்துவது சரியாகும்” என்று செங்கோட்டையில் ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்து உள்ளார்.rajah

SHARE