ராம்குமார் நீதிமன்றில் ஆஜர்: 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு

197

swathimurderaccesd

சுவாதி கொலையில் கைதான ராம்குமார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுகிறார். ராம்குமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த இவர், சுவாதியுடன் பழக முடியாத ஆத்திரத்தில் அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

போலீஸ் பிடியில் சிக்கிய போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார், சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று காலை சிறையில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

ராம்குமாரின் ஆதரவான வக்கீல்களும் அவரை சிறையில் சந்தித்து பேசினர்.

ராம்குமார் குற்றமற்றவர் என்றும், அது தொடர்பான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வோம் என்றும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையே ராம்குமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து எழும்பூர் கோர்ட்டில் போலீசார் முறைப்படி மனு தாக்கல் செய்தனர்.

அதில் ராம்குமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.அப்போது ராம்குமாரை காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு எத்தனை நாட்கள் அனுமதி கிடைக்கும் என்பது தெரியவரும்.

இதற்காக இன்று ராம்குமார் எழும்பூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

இதற்காக எழும்பூர் நீதிமன்றம் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SHARE