ரிச்சியில் நிருபராக நடித்தது மகிழ்ச்சி ‌ஷரத்தா ஸ்ரீநாத்.!

272

‘காற்றுவெளியிடை’,‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் நடித்தவர் ‌ஷரத்தா ஸ்ரீநாத். இப்போது ரிச்சி படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடிக்கிறார். விக்ரம் வேதா படத்தில் மாதவன் ஜோடியாக வக்கீலாக நடித்த இவர், இதில் பத்திரிக்கை நிருபராக வருகிறார்.

இது பற்றி ‌ஷரத்தா ஸ்ரீநாத் கூறும்போது…

“நான் முதலில் நடித்த படம் ரிச்சி தான். ஆனால் அதற்கு முன்பு மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டன. ரிச்சி படம் ரவுடிசம் கலந்த கதை அம்சம் கொண்டது. நான் இதில் ரவுடிகளை பேட்டி எடுக்கும் பத்திரிகை நிருபராக நடித்து இருக்கிறேன். இந்த படத்தில் நிவின் பாலி ஒரு ரவுடி அவரை நான் பேட்டி எடுக்கிறேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

இதில் நான் பத்திரிக்கை நிருபராக வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது நல்ல கதை அம்சம் கொண்ட படம். எனக்கு இது வெற்றி படமாக அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.

SHARE