ஆகஸ்ட் மாதம் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கு நல்லெண்ணத் தூதுவராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை இந்திய ஒலிம்பிக் சங்கம் ( ஐஓஏ ) நியமித்துள்ளது.
முன்னதாக நடிகர் சல்மான் கான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இப்பிரச்சனையை சமாளிக்கும் விதமாக மேலும் பலரை நல்லெண்ணத் தூதுவர்களாக ஐஓஏ நியமித்தது. சச்சின் தெண்டுல்கர், அபினவ் பிந்த்ரா ஆகியோரை நியமிக்க, தற்போது ஏ.ஆர்.ரஹ்மானையும் தூதுவராக ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.
ரகுமான் இப்பதவி தனக்கு பெருமை அளிப்பதாக அண்மையில் பேட்டியளித்துள்ளார்.