ரீஎன்ட்ரி கொடுக்கும் மலையாள நடிகை

109
விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை
பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார் கனிகா.
சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற முக்கியமான படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, டப்பிங்கும் கொடுத்து வந்தார்.
கனிகா
சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் குரல் கொடுத்தது கனிகா தான். 2006 ஆம் ஆண்டில் வெளியான வரலாறு தான் தமிழில் கனிகா நடித்த கடைசி படமாகும். தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வர உள்ளார்.
SHARE