ருத்திராட்சையின் ஒளஷத குணங்கள்

190

ருத்திராட்சையின் ஒளஷத குணங்கள் ஏராளம் காணப்படுகின்றது. இதுதான் ருத்திராட்சை அணிவதிலும் நம் முன்னோர்கள் மிகமுக்கியத்துவம் அளித்திருந்தனர்.

ஒருமுக ருத்ராட்சம் மணியை உடலில் அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, எலும்புருக்கி நோய், மூட்டுவலி, பக்கவாதம், கண்களில் ஏற்படும் பிரச்சினைகளின் தீவிரத்தை தணிக்க முடியும்.

இருமுக ருத்ராட்சம் மணியை உடலில் அணிவதன் மூலம் தீக்காயங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் கவனசிதறல், மன அழுத்தம், குழந்தைபேறு இல்லாதவர்கள் இருமுக மணியை உடலில் அணிவதன் மூலம் நல்ல பலன் பெறமுடியும்.

மூன்று முக மணியினை அணிவதால் ஆயுதங்களினால் ஏற்படும் காயங்களின் பாதிப்பினை குறைக்கலாமாம். மேலும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை சிந்தனை உடையவர்களுக்கு நல்ல பலனை அளிக்குமாம்.

நான்கு முக ருத்ராட்சம் மணியை உடலில் அணிவதன் மூலம் இருமல் தொல்லைகளில் இருந்து தீர்வு பெறலாம். மேலும் இரத்த ஓட்டம் சிறப்பாகும்.

ஐந்துமுக ருத்ராட்சம் மணியை உடலில் அணிவதன் மூலம் உடல்பருமன் பிரச்சினைகள் மற்றும் இதயக் கோளாறு உடையவர்களுக்கு நல்ல பலனைத் தருமாம்.

ஆறுமுக ருத்ராட்சம் மணியை உடலில் அணிவதன் மூலம் குழந்தையின்மை, வலிப்பு மற்றும் பேச்சாற்றல் திறன் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

ஏழுமுக ருத்ராட்சம் மணியை உடலில் அணிவதன் மூலம் மூச்சுக் கோளாறு மற்றும் கால்களில் பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

எட்டு முக ருத்ராட்சம் மணியை உடலில் அணிவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகள், தோல்வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

ஒன்பது முக ருத்ராட்சம் மணியை உடலில் அணிவதன் மூலம் தன்னம்பிக்கை பெருகி உடல் ஆரோக்கியம் மிளிரும்.

பத்துமுக ருத்ராட்சம் மணியை உடலில் அணிவதன் மூலம் உறுதியான மனநலம் வாய்க்கும்.

SHARE