கோலிவுட்டை பொறுத்த வரை தற்போது நல்ல படங்களுக்கு எல்லாம் மரியாதை இல்லை. படம் வெளிவந்ததும் எத்தனை நாட்களில் ரூ 100 கோடி என ரசிகர்களிடம் ஒரு எதிர்ப்பார்ப்பு உருவாக்கி வருகின்றது. ஆனால், இதில் எந்த படம் உண்மையாகவே ரூ 100 கோடி வசூல் செய்தது என்றால் கேள்விக்குறி தான்.
ஜில்லா
விஜய் நடிப்பில் ஜில்லா வெளிவந்த 7 நாட்களில் ரூ 100 கோடி வசூல் என விளம்பரம் கொடுத்தனர், ஆனால், மதுரையில் இந்த படத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்தது ‘வலி’ வேற டிப்பார்ட்மெண்ட்.
வீரம்
தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்று விக்கிபீடியாவை தட்டிப்பார்த்தால், அஜித் நடித்த படங்களில் வீரம் படமே ரூ 130 கோடி என எடிப்பார்க்கும், விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் லாபம் என்றாலும், தயாரிப்பாளருக்கு கொஞ்சம் நஷ்டம் தான், நம்பினால் நம்புங்கள்.
24
சூர்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்த 24 ஓப்பனிங் நாள் வசூலே ரூ 6 கோடி தான், ஆனால், 10 நாட்களில் ரூ 100 கோடி என கணக்கு கான்பித்தார்கள். எல்லாம் காந்தி கணக்கு தான்.
ஆரம்பம்
அஜித்-விஷ்ணுவர்தன் இரண்டாவது முறையாக இணைந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்புடன் ஆரம்பம் வந்தது, முதல் ஒரு வாரத்தில் ரூ 50 கோடி வசூலை தாண்டியது உண்மை தான், ஆனால், இன்று வரை அவருடைய ரசிகர்கள் தான் ரூ 100 கோடி வசூல் என்று கூறுகிறார்கள், தயாரிப்பாளர் கூறிய பாடில்லை.
இருமுகன்
விக்ரம் என்றாலே வித்தியாசம் தான், அப்படி வித்தியாச கதைக்களத்தில் வெளிவந்த இருமுகன் ஹிட் என்றாலும், ரூ 100 கோடி வசூல் என விளம்பரம் கொடுத்தது வெறும் விளம்பரத்திற்கே.
பைரவா
வெளிவந்த 4 நாட்களில் ரூ 100 கோடி வசூல் என்றார்கள், தளபதி ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் எண்ணி 7 வது நாள் நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் வந்தார்கள்.
சிங்கம்-3
விஜய் 4 நாட்களில் ரூ 100 கோடி சென்னார், நம்ம கொஞ்சம் கேப் விட்டு 6 நாட்களில் ரூ 100 கோடி சொல்லலாம் என சிங்கம்-3 படக்குழு முடிவு செய்தது போல, ஆனால், இவர்கள் சொன்ன ரூ 100 கோடியை கூட நம்ம அக்சப்ட்(Accept) பண்ணிக்கலாம், சிங்கம்-4 மட்டும் வேண்டாம் சார்.
இப்படித்தான் நம்மை படம் ரிலிஸிற்கு ரிலிஸ் இந்த தயாரிப்பாளர்களும், நடிகர்களும் ஏப்ரல் Fool ஆக்கி வருகின்றார்கள், உஷாரா இருங்க மக்களே.