ரூ.100 கோடி ஹர்திக் பாண்டியாவிற்காக செலவிட்டதா மும்பை இந்தியன்ஸ்? சுவாரஸ்ய தகவல்

224

 

ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு வழங்க மும்பை இந்தியன்ஸ் அணி சுமார் ரூ.100 கோடி வரை குஜராத் அணிக்கு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்குகிறது, இதற்கான மினி ஏலம் கடந்த 19ம் திகதி நடைபெற்று முடிந்துள்ளது.

இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணி Trade முறையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதுடன், அணியின் புதிய கேப்டனாக அவரையே நியமித்துள்ளது.

ரூ.100 கோடி ஹர்திக் பாண்டியாவிற்காக செலவிட்டதா மும்பை இந்தியன்ஸ்? சுவாரஸ்ய தகவல் | Mumbai Indian Cost 100 Crores For Hardik Pandiyaa

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவானது MI ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் அணியிடம் இருந்து Trade முறையில் ஹர்திக் பாண்டியாவை  வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அவரை எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது என்பதை வெளியிடாமல் இருந்தது.

ரூ.100 கோடி ஹர்திக் பாண்டியாவிற்காக செலவிட்டதா மும்பை இந்தியன்ஸ்? சுவாரஸ்ய தகவல் | Mumbai Indian Cost 100 Crores For Hardik Pandiyaa

இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுமார் 100 கோடி ரூபாய் கொடுத்து ஹர்திக் பாண்டியாவை வாங்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

ஆனால் ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மட்டுமே டிரேடிங் செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்று தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE