ரூ.2 கோடி வழங்கிய பொதுமக்கள்

160

பிரித்தானிய நாட்டில் பெற்றோர் புற்றுநோயால் உயிரிழந்ததை தொடர்ந்து அவர்களது பிள்ளைகள் மூவரின் எதிர்காலத்திற்காக பொதுமக்கள் ரூ.2 கோடி வழங்கியுள்ள சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Wirral என்ற நகரில் Mike Bennet( 57) மற்றும் Julie(50) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு Luke(21), Hannah(18) மற்றும் Oliver(13) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்னால் தந்தைக்கு மூளையில் புற்றுநோயும், தாயாருக்கு கல்லீரலில் புற்றநோயும் உருவானது.

நோயை குணப்படுத்த இருவரும் கடுமையாக போராடியுள்ளனர். ஆனால், இருவருக்கும் புற்றுநோய் தொடர்ந்து பரவி ஆபத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

இந்நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒன்றாக சிகிச்சை மேற்கொள்வது போன்று ஒரு புகைப்படத்தை பிள்ளைகள் எடுத்து உதவிக்கேட்டு வெளியிட்டுள்ளனர்.

செய்திதாள்களில் வெளியான இப்புகைப்படம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் தந்தை உயிரிழந்துள்ளார். இதற்கு அடுத்து 5 நாட்களுக்கு பிறகு தாயாரும் உயிரிழந்துள்ளார்.

பிள்ளைகளின் நலனிற்காக பொதுமக்களிடம் நிதிக் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பெற்றோரை இழந்து வாடும் மூன்று பிள்ளைகளுக்காக கடந்த சில தினங்களில் 275,000 பவுண்ட்(2,22,50,556 இலங்கை ரூபாய்) வரை பொதுமக்கள் வசூல் செய்து கொடுத்துள்ளனர்.

பொதுமக்களின் கருணைக்கு நன்றி தெரிவித்துள்ள பிள்ளைகள் தங்களது தேவைக்கு போக இத்தொகையில் மீதியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE