பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான், பண்டிகை காலத்தை பணமாக்க Amazon Great Indian Festival விற்பனையை நடத்தி வருவது தெரிந்ததே.
அக்டோபர் 8-ஆம் திகதி தொடங்கிய இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, பல்வேறு வகையான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. மின்னணு சாதனங்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த வரிசையில், அமேசான் விற்பனையின் ஒரு பகுதியாக சில ஸ்மார்ட் கேஜெட்டுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. தள்ளுபடியின் ஒரு பகுதியாக ரூ. 2 ஆயிரத்துக்குள் இந்த ஸ்மார்ட் கேஜெட்களை நீங்கள் வாங்கலாம். அந்த கேஜெட்டுகள் என்ன? அவற்றின் பயன் என்ன? இது போன்ற முழு விவரங்கள் உங்களுக்காக..
HomeMate WiFi Smart Door Gadget என்பது Amazon-ல் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் கேஜெட்களில் ஒன்றாகும். இதன் அசல் விலை ரூ. 3999 மற்றும் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ. 999க்கு சொந்தமாக்கலாம்.
இந்த கேஜெட்டின் பயன் என்னவென்றால், இந்த கேட்ஜெட்டை கதவு அல்லது அலமாரிகளில் பொருத்தும் வசதி உள்ளது. WiFi உடன் இணைக்கும் இந்த கேட்ஜெட் மூலம், கதவுகள் அல்லது அலமாரிகள் திறக்கப்படும் போதெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போனுக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்பப்படும். இந்த தயாரிப்புக்கு ஒரு வருட உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
Amazon Sale ரூ. 2000க்கு கீழ் கிடைக்கும் மற்றொரு சிறந்த ஸ்மார்ட் கேஜெட் Zebronics Zeb Smart Cam ஆகும். இந்த ரகசிய கேமராவின் அசல் விலை ரூ. 2,499. 52 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 1,198-க்கு வாங்கலாம்.
இந்த கேமராவின் அம்சங்களைப் பொறுத்த வரையில், இந்த கேமராவில், Wifi, remote monitoring, advanced motion detection, day/night mode, live streaming, microSD card slot, 2 way audio மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்மார்ட் போன்களுடன் எளிமையாக இணைக்கூடிய வசதிகள் உள்ளன. இந்த கேமரா 2 மெகாபிக்சல்கள் கொண்டது. இதில், அலெக்சா மற்றும் ஓகே கூகுள் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வீட்டில் தண்ணீர் கேன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் கேன்களில் இருந்து தண்ணீர் எடுப்பது சிரமமாக இருக்கும். இந்த ஸ்மார்ட் கேஜெட் இந்த சிக்கலைச் சரிசெய்கிறது.
தண்ணீர் கேன்களில் இருந்து தண்ணீரை எளிதாக எடுக்க இந்த கேஜெட் பயனுள்ளதாக இருக்கும். இதில் 1200 mAh லித்தியம் பேட்டரி உள்ளது. ஒரு முறை முழு சார்ஜ் 8 முதல் 10 தண்ணீர் கேன்கள் வரை வேலை செய்யும். ஒரு சிறிய பொத்தானை அழுத்துவதன் மூலம் தண்ணீர் கேனிலிருந்து எளிதாக வெளியேறும். இந்த கேஜெட்டின் அசல் விலை ரூ. 1999 வரை, தள்ளுபடி ரூ. 1059க்கு சொந்தமாக்கலாம்.
WiFi சிக்னலை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் இந்த கேஜெட்டின் அசல் விலை ரூ. 5,499 விற்பனையின் ஒரு பகுதியாக, 69 சதவீத தள்ளுபடி ரூ. 1699க்கு சொந்தமாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இது ஒரு நொடிக்கு 433 மெகாபைட் வேகத்தில் டேட்டாவை மாற்றும். Dual Bond இந்த தயாரிப்பின் சிறப்பு அம்சமாகும்.
Amazon விற்பனையில் வெறும் ரூ. 549க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் கேஜெட்களில் இதுவும் ஒன்றாகும். விப்ரோ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் பல்ப் ஒரு வருட வாரண்டியுடன் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் பல்ப் Alexa மற்றும் Google Assistant ஆகியவற்றை ஆதரிக்கிறது. Wipro Next ஸ்மார்ட் ஆப் மூலம், குரல் கட்டளைகளின் அடிப்படையில் ஒளியைக் கட்டுப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் பல்பின் அசல் விலை ரூ. 2,099. ஆனால் 74 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும்.