ரொறன்ரோவில் ரயிலில் சிறுமியிடம் கொள்ளையிட்ட இரண்டு பேரை தேடும் பொலிஸார்

96

 

ரொறன்ரோவில் ரயிலில் சிறுமி ஒருவரிடம் கொள்ளையிட்ட இரண்டு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த இரண்டு சந்தேக நபர்களினதும் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கொக்ஸ்வெல் ரயில் நிலையத்தில் ஏறிய ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சிறுமியிடம் கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலில் வைத்து சிறுமியுடன் பயணம் செய்த சில சிறுமியருக்கும் இந்த சந்தேகநபர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் சிறுமியிடமிருந்து அலைபேசியை களவாடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 416-808-5500 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

SHARE