பாராளுமன்றின் பொதுமக்கள் மற்றும் சபாநாயகர் பார்வையாளர்கள் கலரி நாளையதினமும் மூடப்படவுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்தனர்.பாராளுமன்றம் நாளை புதன்கிழமை காலை 10.30 கூடவுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற பார்வையாளர் பகுதிக்கு ஊடகவியாலாளர்களுக்கு மாத்திரம் செய்திசேகரிப்புக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளைய பாராளுமன்ற அமர்வுக்கான சபை ஒழுங்கு பத்திரத்தை தயாரிப்பது குறித்தும் இன்று இடம்பெறும் சபாநாயகருக்கும், பாராளுமன்ற செயலாளருக்கும், பிரதி செயலாளருக்கும் இடையிலான கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.