றாவூரை சேர்ந்த புகாரி முஹமது நஜீம் லாபீர் கான் – வயது 28 என்கிற ஆசிரியரே சிவக்காந்தன் என்று பெயரை மாற்றி, சமயமும் மாறி உள்ளார்.

184

 

காதலித்த தமிழ் பெண்ணை கைப்பிடிக்கின்றமைக்காக முஸ்லிம் வாலிபன் ஒருவர் தமிழ் இந்துவாக மாறிய பரபரப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று உள்ளது.

ஏறாவூரை சேர்ந்த புகாரி முஹமது நஜீம் லாபீர் கான் – வயது 28 என்கிற ஆசிரியரே சிவக்காந்தன் என்று பெயரை மாற்றி, சமயமும் மாறி உள்ளார்.

மரப்பாலத்தை சேர்ந்த நல்லதம்பி சாந்தி – வயது 23 என்பவர் இவரின் காதலி. இருவருக்கும் ஏறாவூர் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தில் இந்துப் பாரம்பரியப்படி திருமணம் இடம்பெற்றது. தாலி அணிவித்து திருமணம் செய்து கொண்டார்.

செங்கலடி வர்த்தக தலைவர் மோகன் இத்திருமணத்தை முன்னின்று நடத்தினார்.

பதிவுத் திருமணத்தை திருமண பதிவாளர் கமலேஸ்வரி தம்பிராஜா மேற்கொண்டார்.

SHARE