கறுப்பு ஜூலை நினைவு நாளில் மாபெரும் பிரச்சார பணியில் நாடு கடந்த தமிழீழ அரசு

169
நேற்றைய தினம் 35வது கறுப்பு  ஜூலை நினைவுநாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த காலங்களில் சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களின் வடுக்கள் சுமந்த படங்கள் தாங்கிக்க பதாகை கண்காட்சியும், இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு  பரிந்துரைக்க கோரியதான பிரச்சார பணியும்  பிரிட்டனில்  அமைந்துள்ள  பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
 
காலை 11 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்ட இந்நினைவஞ்சலி நிகழ்வில்  கடந்த 1993ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீதான இனவழிப்பின் தடயங்கள் காட்ச்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் இலங்கை தற்போது வரையும் செய்து கொண்டிருக்கும் இனவழிப்பு  தொடர்பாக பிரச்சாரங்களும் நடைபெற்றது. அத்துடன் இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு அனுப்புவதற்கு பிரிட்டன் வலியுறுத்த வேண்டும் என்பதற்கான மக்கள் கையொப்பம் பெறும் பிரித்தானிய பாராளுமன்றின் இணைய முகவரியும் வெளியிடப்பட்டது.
 
குறித்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 
SHARE