சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்னவிடம் விசாரணை நடத்பத்பட்டுள்ளது.
லசந்த கொலையின் போது பிரதிக் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய பிரசன்ன நாணக்கார மற்றும் கல்கிஸ்ஸ காவல் நிலைய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தி பின்னர் விடுதலை செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் கந்தேகெதர பிரியந்த என்பவரிடம் மீளவும் விசாரணை நடத்த சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.