ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கைது கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் லசந்தவின் கொலை தொடர்பான வழக்கு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, இதன்போது எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபரே தன்னை கடத்தியவர் என்று லசந்தவின் சாரதி அடையாள அணிவகுப்பில் அடையாளங்காட்டியிருந்தார் லசந்த விக்கிரமதுங்க., 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று ரத்மலானை அத்திட்டிய பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.