லசந்த, பிரகீத் பற்றி மட்டும் ஏன் பேசப்படுகின்றது – சரவணபவன்

294

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவங்கள் பற்றி மட்டும் ஏன் பேசப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் தொடர்பிலான சில சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் வடக்கில் பல்வேறு வழிகளில் ஊடகவியலாளர்கள் நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE