சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரியவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் உதலாகம கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் அடையாளம் காணும் அணி வகுப்பில் நிறுத்தப்பட்டதுடன் லசந்தவின் சாரதி அவரை அடையாளம் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெஹிவளை அத்திட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது மகிந்த பாலசூரியவே பொலிஸ் மா அதிபராக பணியாற்றினார்.
கொலை தொடர்பில் அப்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.