லட்சக்கணக்கான பணத்தினை தூக்கி வீசிய இளம் கோடீஸ்வரர்

178

ஹாங்காங்கை சேர்ந்த வாங் சிங் கிட் என்ற மில்லியனர் பெரிய மாடியின் கட்டிடத்தில் ஏறி நின்றுகொண்டு பணத்தினை பொதுமக்கள் மீது வீசியுள்ளார்.

கிரிப்டோகரன்சிகளில் செய்த முதலீடு மூலம் நிறைய கோடிகளை சம்பாதித்து உள்ளார் வாங் சிங் கிட்.

24 வயதான இவர் சொகுசு காரில் வந்திறங்கி ஹாங்காங்கின் ஷாம் ஷு பேய் என்ற பகுதியில் உள்ள மாடிக் கட்டிடம் ஒன்றின் மாடியில் விறுவிறுவென ஏறி, பணத்தை அள்ளி எறிந்துள்ளார்.

புதிய புதிய கிரிப்டோகரன்சிக்கு இவர் கொடுத்த விளம்பரங்கள் மூலம் நிறைய வருமானம் பெற்றார் . தற்போது இவரது வங்கி கணக்கில் சில கோடிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர், வீசி எறிந்த பணத்தினை பொதுமக்கள் சென்று எடுத்துள்ளனர். சுமார் 18 லட்சத்தினை இவர் தூக்கி எறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து பணமும் கிரிப்டோ கரன்சிகளை விளம்பரம் செய்ததன் மூலம் இவர் ஈட்டிய பணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் பணத்தை துாக்கி எறிந்த சில மணி நேரங்களில் பொது அமைதியை கெடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

ஆனால், மக்களுக்கு உதவும் வகையில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

SHARE