லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன்னா

127
தமன்னா, லட்சுமிமேனன்

தமன்னா, லட்சுமிமேனன்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பெற்றார் அவர்.
ஏற்கனவே அதர்வா நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காகி வரும் படம், தற்போது பாலிவுட்டிலும் ரீமேக்காக உருவாக உள்ளது. அதற்கான நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்தார்த் நடித்த பாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான பர்கான் அக்தர் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமன்னா, லட்சுமிமேனன்
வளர்ந்து வரும் நடிகரான கார்த்திக் ஆர்யன் இந்த பாத்திரத்தில் நடிக்க உள்ளார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்த படத்தை அபிஷேக் இயக்க உள்ளார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரமாகக் கருதப்படும் பாபி சிம்ஹா ரோலில் சஞ்சய் தத், லட்சுமி மேனன் நடித்த வேடத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமன்னா, நவாசுதீன் சித்திக் ஜோடியாக போலே சுதீயா என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
SHARE