லண்டனில் இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று அங்கிருந்த கடை ஒன்றில் மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
லண்டனின் Clapham இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள Poggenpohl Kitchen ஷோ ரூமின் மீது காலை உள்ளூர் நேரப்படி 7 மணி அளவில் திடீரென்று இரண்டு அடுக்கு கொண்ட பேருந்து ஒன்று மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது குறித்து மருத்துவமனையில் இருக்கும் நர்ஸ் ஒருவர் கூறுகையில், பேருந்தை இயக்கி வந்த டிரைவரிடம் இது குறித்து கேட்ட போது அவர் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் கூறுகையில், திடீரென்று பேருந்து அங்கிருந்த ஷோ ரூமில் மோதியதால், அதிர்ச்சியில் அனைவரும் கத்தினர்.
அப்போது பேருந்தின் மேல் பகுதியில் இருந்த பெண் ஒருவர் பேருந்தின் இடையில் சிக்கிக் கொண்டார். அதன் பின் அவர் பத்திரமாக கிரேன் மூலம் மீட்கப்பட்டார் என தெரிவித்தார்.
மேலும் பேருந்தை இயக்கி வந்த டிரைவருக்கு திடீரென்று காக்க வலிப்பு வந்துவிட்டதால், இந்த விபத்து ஏற்பட்டுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருந்த போதிலும் அந்த பேருந்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.