
பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகைதான்.
அதனால் கார்களை பயன்படுத்துவதை போதுமான அளவு தவிர்த்துவிட்டு சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நிர்வாணமாக சைக்கிளில் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி ஆங்காங்கே நடந்து வருகிறது.
The World Naked Bike Ride என்ற அமைப்பு ஒன்று இதற்காக செயல்பட்டு உலகின் பல்வேறு நாடுகளில் நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று லண்டனில் இந்த நிர்வாண சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் நிர்வாணமாக சைக்கிளில் பவனி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தில் கலந்து கொள்ள நகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மத்திய லண்டன் நோக்கி வந்து அதன்பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் 5 கி.மீ தூரத்திற்கு நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தை நடத்தினர்.
இந்த ஊர்வலத்திற்கு போலீஸார் தகுந்த பாதுகாப்பும் அளித்தனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இந்த சைக்கிள் ஊர்வலத்திற்காக லண்டனில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
சைக்கிளில் செல்வதால் சுற்றுச்சூழல் மாசு படிவது குறைவதோடு உடலுக்கு ஆரோக்கியம். தினமும் ஐந்து கிமீ சைக்கிள் ஓட்டும் நபருக்கு எவ்வித நோயும் வராது. எனவே பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஊர்வலம் நடத்துவதாக The World Naked Bike Ride அமைப்பு செயலாளர் கூறினார்.