லண்டனில் பாரிய தீ விபத்து

157

லண்டனின் பேய்ஸ்வாட்டர் பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு 60 தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bayswater பகுதியில் உள்ள குடியிருப்பில் உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணி அளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

மேலும் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளதால், அங்கு 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View image on Twitter

அதுமட்டுமின்றி அப்பகுதிக்கு மக்கள் யாரும் தீயை அணைக்கு வரை வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View image on Twitter

 தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் இரண்டு தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் தீ பரவவிடாமல் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருவதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

View image on Twitter

SHARE