லண்டனில் மிகவும் பிரமாண்டமாக வோல்தம்ஸ்டோ பிள்ளையார் ஆலய தேர் திருவிழா இன்று இடம்பெற்றது.
லண்டனின் பல மாகாணங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டதுடன், தாயகத்தின் நினைவுகளை மீட்டுபார்க்கும் அளவில் அங்கிருந்த புறச்சூழல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பறவைக் காவடி, அங்குள்ள அனைவரையும் கவனித்து ஈர்க்கும் வகையில் இருந்ததுடன், பலரும் பக்தி பரவசத்துடன், தேர்த்திருவிழா உற்சவத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.