மேற்கு லண்டனில் அமைந்துள்ள கம்டன் சந்தைத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
8 தீயணைப்பு வாகனங்ள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்களை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக லண்டன் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீ அனர்த்தம் ஏற்பட்டவுடன் லண்டன் நேரப்படி இன்று காலை 12.10 மணியளவில் சம்பவம் இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாக பெருநகர் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதற்கு முன்னரே லண்டன் தீயணைப்பு பொலிஸ் பிரிவினர் அங்கு சென்றிருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதியில் வாழும் மக்கள் தீ சம்பவத்தின் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள சந்தையில் கிட்டத்தட்ட 1000 கடைகளுக்கு மேல் உள்ளதுடன், சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஒரு இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தம் காரணமாக நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.