
அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ராணுவம் இணைந்து அதிவேக விமானம் தயாரித்துள்ளனர். ஹைபர் சோனிக் தொழில் நுட்பத்துடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் சோதனை ஓட்டம் 10 தடவை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வூமராவிலும், நோர்வேயில் அன்டோயா ராக்கெட் தளத்திலும் சோதனை ஓட்டங்கள் நடந்தன. அந்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன.
சிட்னியில் இருந்து லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறந்தது. இவற்றிக்கு இடையேயுள்ள தூரம் 17 ஆயிரம் கி.மீட்டர் ஆகும்.
இதில் சூப்பர் சோனிக் கம்பஸ்டன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி பறக்க கூடியது.