லண்டனை நகரை கண்காணிக்கும் புறாக்கள் (வீடியோ இணைப்பு)

314
லண்டன் நகரில் உள்ள மாசு அளவை புறா மூலம் கண்காணிப்பதற்கான நூதன முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.பிரித்தானியாவின் லண்டன் நகரில் காற்றில் உள்ள மாசுவின் அளவு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுவுக்கான அளவையும் அந்நகரம் கடந்துள்ளது.

அடுத்த 5 வருடங்களில் லண்டன் உள்ளிட்ட மற்ற நகரங்களில் நைட்ரோஜன் டை ஆக்சைடின் அளவு கணிசமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து லண்டன் நகரின் மாசு அளவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக புறாக்களின் உடலில் நுண்ணிய கருவிகள் பொருத்தி அதன் மூலம் மாசுவின் அளவை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கருவிகள் காற்றில் உள்ள நைட்ரோஜன் டை ஆக்சைட், ஓசோன் வாயுகள் போன்றவற்றை ஆய்வு செய்யும்.

இதை வைத்து நகரின் மாசு அளவு அதிகமாக உள்ளதா அல்லது நடுத்தர அளவில் உள்ளதா என்பது கணிக்கப்படும்.

Pigeon patrol என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோந்து பணிக்காக லண்டனில் புறநகரில் இருந்து 10 புறாக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE