லண்டன் தாக்குதல்தாரி காலித் மசூத்தின் உண்மையான பெயர்? தாய் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

220

லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தி 5 பேரை கொன்ற காலித் மசூத்தின் செயல் குறித்த அவரது தாய் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

காலித் மாசூத்தின் தாய் Janet Ajao கூறியதாவது, நான் என் நிலையை முற்றிலும் தெளிவாக்க விரும்புகிறேன்.

இந்த கொடூர செயலில் ஈடுபட வழிவகுத்த அவனின் நம்பிக்கைக்கு நான் ஆதரவு அளிக்கவும் இல்லை, அவனை நான் மன்னிக்கவும் இல்லை.

இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக நான் கண்ணீர் சிந்தினேன். Adrian Elms என்றழைக்கப்பட்டு வந்த அவன் கடந்த 2005ம் ஆண்டு இஸ்லாமிய மதத்தில் இணைந்து தனது பெயரை மசூத் என மாற்றிக்கொண்டான் என கூறியுள்ளார்.

எனினும், தற்போது வரை மசூத் ஐ.எஸ் குழுவால் செயல்படுத்தப்பட்டார் என்ற எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE